Blog

செழிப்பான நிலப்பரப்பில் உணவில்லாமல் மக்கள் செத்து மடிந்தார்கள் என்றால்

தென்கிழக்கு இந்தியாவின் மலைப்பிரதேசம், பல்லுயிர்கள் நிறைந்த அடர்ந்த வனம், ஆங்காங்கே ஊற்றெடுத்து வெள்ளைத் திரியாய் தொங்கும் அருவிகளும், மிகையான குளிர்ச்சியும், மிதமான வெப்பமும், நிறைவான மழையளவும், போதாக்குறைக்கு தங்கம் புதைந்து கிடக்கிற பூமி. தேயிலை, காபி போன்றவை விளைய ஏதுவான பள்ளத்தாக்குகள் கொண்ட இந்த பகுதியைத்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் உற்பத்தி கிடங்காகவும், அதன்மூலம் வருவாயை பன்மடங்கு பெருக்க, காடுகளை அழித்துத்தோட்டங்களை உருவாக்கிக்கொண்டிருந்த நேரம் அது. இப்படிப்பட்ட செழிப்பான நிலப்பரப்பில் உணவில்லாமல் மக்கள் செத்து மடிந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அதற்கு நாம் கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டும். 1874 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்படுகிறது. 1876 ஆம் ஆண்டு விக்டோரியா இந்தியாவின் ராணியாக பொறுப்பேற்பதற்கான ஆயத்தபணிகளை துவக்கியது இங்கிலாந்து அரசு. அந்த வருடம் இந்தியாவில் பருவமழை பொய்த்து போனது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த அதிக மழையினால் கோலார் மற்றும் பெங்களூர் பகுதிகளில் விளைந்திருந்த ராகி பயிர் முற்றிலுமாக நாசமாகிவிட்டது. உணவு தட்டுபாடு மற்றும் ஊட்டசத்து குறைபாட்டினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதோடு காலாரா, வயிற்றுப்போக்கு, சின்னம்மை போன்ற வியாதிகள் பலி எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. ஆனால் அரசாங்கம் மிக சொற்பமான தொகையை நிவாரணநிதியாக அறிவித்தது. 1877 சனவரி 1, விக்டோரியா இந்தியாவின் அரசியாக பதவியேற்கிறார். இந்த ஆண்டும் பருவமழை ஏமாற்றவே உணவு தட்டுப்பாடு அதிகமாகிறது. தானியங்களின் விலை இருமடங்காய் உயர்ந்ததன் விளைவு, பலர் தங்கள் கால்நடைகள் மற்றும் நிலங்களை விற்கவேண்டி வந்தது. ‘புதிதாய் வந்த மகராசியின் நேரம் சரியில்லை’ என நம்மவர்கள் தூற்றியிருக்கக்கூடும். மகாராணியின் பதவியேற்பு விழா வெகுவிமர்சியாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. 68000 பேருக்கு பிரமாண்டமான விருந்து சுமார் ஒருவார காலம் நடைபெற்றது. இதே ஆண்டில்தான் அளவுக்கு அதிகமான உணவுதானியங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. (கிட்டத்தட்ட 1 மில்லியன் டன் அரிசியும், 3 லட்சம் டன் கோதுமையும்). உணவுத்தட்டுப்பாட்டின் பாதிப்பு பற்றி சிறிதும் கவலைப்படாமல் இதையெல்லாம் செய்துகொண்டிருந்தார் அப்போதைய வைசிராய் லார்ட் லிட்டன். இந்த இரண்டு ஆண்டுகளில் (1876-1877) மட்டும் 55 லட்சம் பேர் உணவுப்பஞ்சத்தால் பலியாயினர்.ஆங்காங்கே காடுகளை வல்லுறவு செய்து சிதைத்து கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் சிலபல கம்பெனிகளில் (தங்கச்சுரங்கங்கள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் இதில் அடக்கம்) மெலிந்த தேகத்துடன் மிஞ்சியிருக்கும் உடலை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தனர் இந்த தேசத்தின் புதல்வர்கள். வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தோட்டவேலைகள் மற்றும் சுரங்கப்பணிகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் சமவெளி பகுதியிலிருந்து மக்கள் வேலைதேடி பெருமளவில் மலைப்பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தனர். வேலை கிடைக்காதா, அதில் ஒருவேளை பசியாற மாட்டோமா என தோட்டம் தோட்டமாய் அலைந்துகொண்டிருந்தனர். தென்மேற்குப் பருவமழையின் துவக்ககாலம். ஏற்கெனவே பெய்த மழையில் நனைந்திருந்தன மரங்களும், தரையில் கிடந்த சருகுகளும். மரங்களின் கிளைகளிலும், அதில் ஒட்டுண்ணியாய் படர்ந்திருந்த கொடிகளிலும் தொங்கியபடி அங்குமிங்கும் தாவிக்கொண்டிருந்தன கூட்டுக்குடும்பமாய் வாழும் கருமந்திகள் . மழையின் வருகைக்கு இசைவு தருவதுபோல தலையை வேகமாக ஆட்டியபோது இலைகளோடு குலுங்கிய மரங்கள் உண்டாக்கிய 'சோஓஓ' என்ற ஒசையும், கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்பிய 'க்ரிச் க்ரிச்' சத்தமும், பறவைகளின் கூச்சலும், காட்டுப்பூச்சிகளின் பெரும் அதிர்வலைகள் கொண்ட ரீங்காரமும் ஏதோ பெருந்துயரத்தின் முன்னறிவிப்பாக ஒலித்துக்கொண்டிருந்தது.அப்போது தலையில் தொப்பி, கையில் தடி, முழங்காலைத்தொடும் கம்பளியால் ஆன மேலாடை, முட்டிவரை அணிந்த காலணி என மிடுக்கான தோற்றத்துடன் தன் காபித்தோட்டத்தின் பணிகளை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார் அந்த ஆங்கிலேயர். மழை வருவதற்குமுன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என எண்ணியபடி சரிவான அந்த மலைப்பாதையில் மூச்சிறைக்க வேகமாக நடக்கிறார். வழியெங்கும் புதிதாய் முளைத்த வெளிர்பச்சை பூஞ்சைகள் வெல்வெட் துணியை விரித்தது போல இருந்தது. அதில் வழுக்கி விழாமல் இருக்க தன் கைப்பிடியை அழுத்தமாக நிலத்தில் ஊன்றியபடி கவனமாக சென்றவண்ணம் இருந்த அந்த கணத்தில், மின்னலும் இடியுமாக வானம் தன்வசமிருந்த மழையை கொட்டித்தீர்க்க ஆரம்பித்தது. மழை தொடர்ந்து பெய்ததில் பாதையெங்கும் வெள்ளம். அவரால் நடக்க இயலவில்லை. சற்றுதூரத்தில் ஒரு குடிசை தென்படவே, அங்கு சிறிதுநேரம் நின்றுவிட்டு போகலாம் என அக்குடிசையை நோக்கி விரைகிறார். மழைநீர் உடல்மேல் படாதவாறு குடிசையோடு ஒட்டியபடி நிற்கிறார். மழைத்துளி ஒவ்வொன்றும் தோட்டாக்களாக மாறி துளைத்துக்கொண்டிருந்தது குடிசையின் கூரையை. பட்பட் என்ற அந்த சத்தம் அவர் காதில் இடியாய் இறங்கியது. ஆனால் குடிசையில் பேரமைதி. அப்போது குடலைப்பிரட்டும் அளவுக்கு துர்நாற்றம் வர மூக்கை கையால் பொத்திக்கொண்டார். என்னவாயிருக்கும் என்ற அச்சத்தில் சந்தேகத்துடன் தன் கைத்தடியால் கதவை மெல்ல திறக்க அழுகிய நிலையில் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பிணத்தின் வாடை அவரை அங்கு நிற்பதற்குகூட அனுமதிக்கவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பி காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறார். அவர்கள் வந்து குடிசையை திறந்துப்பார்த்ததும் உறைந்து போயினர். ஒரு குடும்பமே இறந்து கிடந்தது அதுவும் அழுகி சிதைந்த நிலையில். மொத்தம் ஆறு பேர். பஞ்சம் பிழைக்க வந்த குடும்பம் பசியால் உணவின்றி இறந்திருப்பதை ஏற்கமுடிகிறதா? மருதநில மாந்தர்களை குறிஞ்சியும் முல்லையும் ஏனோ ஏற்கவில்லை. உடல்கூறு ஆய்வுக்காக அழுகிய சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். அதன் அறிக்கையும் அதையே உறுதி செய்கிறது. இத்துயர சம்பவம் நடந்தது அன்றைய வயநாட்டின் தென்கிழக்கு பகுதியில். அதே மாதத்தில் வயநாடு கணவாய் வழியாக பயணம் செய்கிறார் ஒருவர். வழியெங்கும் 29 பிணங்களை கண்டதாக குறிப்பிடுகிறார். ஆக இந்த 35 பேரும் தங்களை 55 லட்சம் பேர் பட்டியலில் இணைத்து கொண்டனர்.ஓர் உயிர் படைக்கப்படும்போதே அதற்கான உணவும் படைக்கப்பட்டுவிடுகிறது; நீ உண்ணும் ஒவ்வொரு பருக்கையிலும் உன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது; என்பது உண்மையெனில் இவர்களுக்கான உணவு எங்கே போயிற்று? இவர்களின் பெயர்கள் அதில் எழுதப்படவில்லையா? அவர்களுக்கான உணவை களவாடியது யார்? இரண்டாம் பத்தியை மீண்டும் படியுங்கள்.. - சந்திரசேகர்நன்றி: Afasja Jajy

Posted By Admin on 10-01-2021 12:42:08 AM

யானைகள் வசிக்கும் காடுகள்

யானைகள் வசிக்கும் காடுகள்  செழிப்பான பசுமை மாறாகாடுகள் என்பதற்கு எடுத்துக்காட்டு இப்புகைப்படம்  ஓர் யானையின் சானத்திலிருந்து முளைத்துள்ள புளியமரச்செடி நல்ல பசுமையான அடர் வனங்களை உருவாக்குவதிலும் காடுகளை அழிவிலிருந்து காப்பதிலும் யானைகள் பங்கு அபரிவிதமானது #விதைப்பரவலில் யானைகளுக்கு நிகர் எதுவும் இல்லை என்றே சொல்லலாம் மனிதன் வாழ இன்றியமையாத பிராணவாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளே இந்த பசுமைக்காடுகள் பசுமைக்காடுகளை உருவாக்குவது யானைகளே இப்படிப்பட்ட யானைகளை பல அற்ப  காரணங்களுக்காக ஒழித்து வரும் மனிதனால் காடுகள் அழிவதை ஒருபோதும் தடுக்கவும் முடியாது காடுகளை உருவாக்கவும் முடியாது  இதே நிலை தொடர்ந்தால் மனிதன் அழிவதையும் தவிர்க்க முடியாது ....Courtesy: https://www.facebook.com/k.a.hakkeem

Posted By Admin on 10-01-2021 12:36:38 AM

யானை வணங்கி

யானை வெறுக்கும் தாவரங்கள்நெருஞ்சி மூலிகைக்கு "யானை வணங்கி' என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு. காட்டுப் பகுதியில் சில இடங்களில் நெருஞ்சிச் செடிகள் தரையோடு தரையாக படர்ந்து பல முட்கள் உள்ள நெருஞ்சிக் காய்களுடன் காணப்படும். இந்த நெருஞ்சி முட்கள் காலில் குத்திவிடும் என்பதற்காக, யானைகள் இந்த மூலிகையைக் கண்டதும் ஒதுங்கிப் போய்விடுமாம். இதனால் நெருஞ்சி மூலிகைக்கு "யானை வணங்கி' என்று பெயர் வந்தது.மத்திய கென்யாவில் ஒரு சவன்னா வழியாக ஒரு யானை மந்தை நிதானமாக மேய்கிறது. ஒரு சிறிய யானைக் கன்று தனது மூத்த சகோதரியை தூரிகை மூலம் துரத்துகிறது, அதே சமயம் அவர்களின் தாயார், மந்தையின் தலைவி, ஒரு பெரிய அகாசியா (வேல)மரத்திலிருந்து பட்டைகளைத் துடைத்து, அவளது தண்டுகளுடன் இலைகளைப் பிடுங்குகிறார். அடுத்த மர பஃபேவை நெருங்கும்போது அவள் திடீரென்று நிறுத்தப்படுகிறாள். அவள் தலையை அசைத்து அவள் தோளுக்கு மேல் தூசி வீசத் தொடங்குகிறாள், பெரும் கிளர்ச்சியின் அறிகுறிகள். அவள் ஒரு எச்சரிக்கை அழைப்பை ஒலிக்கிறாள், ஒரு டஜன் யானைகளின் மொத்த மந்தைகளும் மரங்களிலிருந்து விலகி ஓடுகின்றன.சுற்றிலும் சிங்கங்கள் அல்லது பிற வேட்டையர்கள் இல்லைஅவைகள் அந்த அகேசியாவை கண்டு அஞ்சி ஒடிகின்றனhttps://kidsnews.mongabay.com/…/what-are-elephants-really-…/அதே போல் indiabiodiversity.org அந்த இணையதளத்தில் எந்த எந்த பயிர்வகைகளை யானை அழிக்கவில்லை என்று ஒரு pdf வெளியிட்டுருக்குஅதில், மிளகாய் , மிளகு , எலுமிச்சை , ஓமம் , இஞ்சி , முள்ளங்கி , இ தாவரங்களை யானை உண்ணாமல் தவிர்த்து செல்கிறது என்றும் ஆகையால் தோட்டங்களில் வேலியாக இப்பயிரை பயன்படுத்தவும் என சொல்லிருக்காங்க..பதிவர் Dev Anand அவர்களுக்கு நன்றி

Posted By Admin on 10-01-2021 12:33:01 AM

யானைகளை பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்

நாம் காடுகளுக்கு நடுவே அமைந்த ஊரில் வாழ்கிறோம். நம்மில் பலபேர் காடுகளில் தான் வசிக்கிறோம். குறிப்பாக உலகிலேயே சிறப்பு வாய்ந்த பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் தொடர்ச்சி தான் நம்முடைய நீலகிரி. நாம் கிட்டத்தட்ட தினமும் யானைகளையோ அல்லது யானைகள் பற்றிய செய்திகளையோ பார்த்துக்கொண்டே வருகிறோம். அதனால் யானைகளை பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் என கருதுகிறேன். நாம் இன்று காணும் யானை அதன் மூதாதையர்களாக கருதப்படும் Proboscidea எனும் பேரினத்தின் தொடர்ச்சியாகும். அது சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. ஒரு யானை தினமும் குறைந்தபட்சம் 70 கிமீ நடக்க வேண்டும். 100-150 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். 200-250 கிலோ உணவை உண்ண வேண்டும். அப்பொழுதுதான் யானை அதன் சராசரி வாழ்க்கையை வாழ்கின்றது என அர்த்தம். ஒரு யானை தன் வாழ்நாளில் சுமார் 18,25,000 மரங்கள் வளர காரணமாக இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த விலங்கு யானை. யானையைப் பற்றி தெரிந்து கொள்வதை போல, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான மனிதரை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர் தான் ‘யானை டாக்டர்’ கிருஷ்ணமூர்த்தி. நீங்கள் முதுமலை யானை காப்பகத்தில் உள்ளவர்களையோ அல்லது அங்கிருக்கும் யானைகளையோ அல்லது நம் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வயதான யானையையோ கேட்டால் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆம்..அவரைப்பற்றியும் அவரோடு உறவாடிய நம் முதுமலை யானைகள் பற்றியும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டவர்கள் கேட்க, காணொளியை இணைத்துள்ளேன். இந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய சிறுகதை தற்போது பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்று இருக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான காணொளி. புத்தகம் படிப்பவர்களுக்கு pdf வடிவில் தேவைப்பட்டால் பதிவிடுங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .. விவாதிப்போம்.https://youtu.be/ZR_Xmckmet8-சந்திரசேகர்www.pandalur.com

Posted By Admin on 10-01-2021 12:27:15 AM

காடுகளின் காவலானாய் திகழும் புலிகள்

காடுகளின் காவலானாய் திகழும் புலிகளை umbrella species என்பார்கள். ஏனெனில் புலிகள் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ளது. அப்படிப்பட்ட புலிகளுக்கே யானைகளால் பல நன்மைகள் நடக்கிறது.காடுகளில் யானைகள் பெரிய படர்ந்த மரங்களின் கைக்கெட்டும் கிளைகளை ஒடித்தும், மூங்கில்களை வளைத்தும் அவற்றை உட்கொள்கின்றன. இப்படிச் செய்யும் கீழே விழும் இலை,தழைகளை தாவர உண்ணிகளான மான்கள், காட்டெருது. கரடி காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி ஆகியன உணவாக்கிக் கொள்கின்றன மரத்தின் படர்கிளைகளை யானைகள் முறித்துப் போடுவதால் கதிரவனின் ஒளி அடர்ந்த காட்டில் புகுந்து நிலத்தை அடைகிறது. இதனால் புற்கள் உள்ளிட்ட உணவுத் தாவரங்கள் செழித்து வளர்ந்து தாவர உண்ணிகளுக்கு அதிக தீவனம் கிடைக்கிறது. இவ்வாறு தாவர உண்ணிகள் அதிகரிக்கும்போதுஅவை புலி போன்ற ஊனுண்ணிகளுக்குப் போதுமான உணவாகின்றன ஆக உணவு வலைப்பின்னல் (Food web)அமைப்பின்படி சூழலமைப்பில் யானைக்கு மிகப்பெரிய பெரிய பங்குண்டு.- நன்றி : அழியும் பேருயிர் யானைகள்.PC : Elise Ghilgristநன்றி. ஆற்றல் பிரவின் குமார்

Posted By Admin on 10-01-2021 12:24:25 AM

Black and white winged dragonfly

தட்டாரப்பூச்சி அல்லது தட்டான் (இலங்கை வழக்கு: தும்பி, dragonfly) என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் கண்ணைக் கவரும் பூச்சிக் குடும்பங்களின் அழகான, ஒல்லியான, பறக்கும் பூச்சித் தனியன்களாகும். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இப்பூச்சி வகைகளைத் தும்பி என்றும் அழைக்கிறார்கள். இவற்றைத் தட்டாம்பூச்சி என்றும் அழைப்பர். தட்டாரப்பூச்சிகள் 14000 முதல் 18000 கி.மீ வரைப் பறக்கக்கூடியன. உலகில் தட்டான், ஊசித்தட்டான் பூச்சிகளில் ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் 503 தட்டான் இனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலகில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் வாழ்கின்ற ஓர் உயிரினம். இப்பூச்சி இனம் நில உலகில் மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே வாழ்ந்து வரும் ஓர் உயிரினம். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிவுற்ற தொன்மாக்களுக்கும் மிக முன்னதாகவே, ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வாழ்ந்துவரும் ஓர் உயிரினம்.- ChandraSekar

Posted By Admin on 10-01-2021 12:20:56 AM

மேற்கு தொடர்ச்சி மலை !.

குஜராத்தின் தபதி நதியிலிருந்து ஆரம்பித்து தமிழத்தின் பொதிகை வரை கால் பரப்பி பறந்து விரிந்து காணப்படும் "மேற்கு தொடர்ச்சி மலை " ஒரு உலக அதிசயம்.இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை போர்த்தி கொண்டிருப்பது மேற்கு தொடர்ச்சி மலை .பல்லுயிர் வாழும் அற்புத சோலைக்காடுகளைக்கொண்டது. உலகிலுள்ள அடர்ந்த காடுகளின் வரிசையில் இதிலுள்ள "சைலண்ட் வேலி " இடம் பெற்றுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான "நீலகிரி "யில், கிழக்கு தொடர்ச்சி மலை சங்கமிக்கிறது.தொட்டபெட்டா, ஆனைமுடி என்னும் இரண்டு உயர்ந்த சிகரங்களைக்கொண்டது. இதில் ஆனைமுடி அதிக உயரமானது."வரையாடு " என்னும் அரிய உயிரினம் வாழும் ஆபூர்வ சூழல் அமைப்பை கொண்டது மேற்கு தொடர்ச்சி மலை.மேற்கு தொடர்ச்சிமலையின் சிகரங்களில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளன.. .இவை மழை நீரை தன்னகத்தே பிடித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.மேற்கு தொடர்ச்சி மலை ஆபூர்வ வன விலங்குகள், பல்லுயிரிகள், பறவைகள், பூச்சியினங்கள் வாழும் சூழலியலைக்கொண்டது.மேற்குதொடர்ச்சிமலையின் ஆனைகட்டி மலைப்பகுதியில் "சலீம் அலி பறவைகள் சரணாலயம்" உள்ளது.உலகின் அதிசய மலரான, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறைபூக்கும் "குறிஞ்சி மலர் " நீலகிரி மலையில் பூக்கிறது.இங்குதான் முதுமலை விலங்குகள் சரணாலயம் உள்ளது.களக்காடு, முண்டந்துறை புலிகளின்சரணாலயமும் மேற்கு தொடர்ச்சி மலையின் "பொதிகையில் " அமைந்துள்ளது.திரிகூட ராசப்ப கவி வியந்துபாடிய "குற்றாலமும் "இங்குதான் உள்ளது.ஆன்மீக வழிபாட்டின் புனித தீர்த்தமான "பாண தீர்த்தம் " இங்குதான் உள்ளது."ஜோக் பால்ஸ் " என்னும் அழகிய அருவி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திளுக்கும் கவின்மிகு தலமாக உள்ளது. காவிரி அன்னையின் உற்பத்தி கேந்திரமான "குடகின் வனப்புமிகு தலைக்காவிரியும் உள்ளது.இன்னும் எண்ணிலடங்கா இயற்கை அதிசயங்களைக்கொண்டமேற்குதொடர்ச்சி மலையின் சூழலியல் கட்டமைப்பை தகர்த்தது ஆங்கிலேயன் காலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை என்றால் மிகையாகாது.ஆங்கிலன் அதை மட்டுமா செய்தான் பல்லுயிரிகள் வாழும் புகலிடத்தை மனிதர்கள் வாழ்வதற்காக அதன் எழிலை அழித்து ஊட்டி, வெலிங்டன் என்னும் நகரங்களை உருவாக்கி, இயற்கைச்சூழலியல் சீர்கேட்டுக்கு முதன் முதலில் அச்சாரம் போட்டான்.!.பின் வந்தவர்கள் அங்கு ரிசார்ட்டுகள் என்னும் கேளிக்கை விடுதிகளை யானைகளின் வலசைப்பாதையில் அமைத்து தடையேபடுத்தினான்.ஆயிரக்கணக்கான வன விலங்குகளின் இருப்பிடத்தை பின் வந்த நம் இனக்கயவர்கள் சூரையாடியதால், அவை மக்கள் வசிக்கும் நகரங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன!.விளைவு விவசாயிகளின் விளை நிலங்கள் அழிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்குப்பெரும் குந்தகம் ஏற்பட்டது!.இதன் எதிரொலியாக வனவிலங்குகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டது!.வன விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதில், மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பான பகுதிகளை தேயிலை, காப்பித்தோட்டங்கள் ஆக்ரமித்துள்ளன.இவற்றுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சியினங்களில் ஆபூர்வங்களாக எண்ணப்படும் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை அழித்துவிட்டது பெரும் சோகம் .சூழலியலில் தகவமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்த வனவிலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் காடுகள் சூரையாடப்பட்டு தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற மரங்கள் ஆக்ரமித்துக்கொண்டன. இவ்வகை தாவரங்களின் வேர்ப்பகுதி வலுவற்றதால் பொழியும் மழையினை பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மையை வெகுவாக இழந்து விட்டன!. ஆபூர்வ இனமான யானைகளின் சரணாலயமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வானளாவிய மரங்கள், சந்தணமரங்கள், தேக்கு மரங்கள், ஈட்டி மரங்கள், செம்மரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வெகுவாக காடுகள் விசமிகளால் அழிக்கப்பட்டுவிட்டன.மேற்கு தொடர்ச்சி மலை என்னும் இயற்கையின் கொடை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.வருங்காலங்களில் இதை உயிர்ப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் இந்திய வரை படத்தில் "தென் இந்தியா " பாலைவனமாகும் அபாயத்திலிருந்து யாரும் காப்பாற்ற முடியாது !.மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியலை பாதுகாக்கும் உறுதியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.பதிவர்: Ks Rajan Cdk

Posted By Admin on 10-01-2021 12:17:12 AM

Golden soccer days

In 70s and 80s Pandalur had golden soccer days. Regardless the age, caste, or community, the Yearly football tournament was a carnival for all pandalurians . The majority of the people gathered there as the regular audience ( The seasonal tickets were a big reputation and respect for many) . Many regular spectators from Mangorange, Thondialam, Attikunnu, and Devala area do an early roll-up of their regular routine to reach pandalur on time to witness the big game. The loudspeaker announcements, advertisements, and cinema songs were something exciting. The once-in-a-while “Vanitha Footbool” was real feast for the eyes of many of us ( the game was not important that day). Pandalur Football team was very famous at that time and they played many countryside tournaments ( mainly in Malappuram , Waynaad district ) and won many trophies and shields. Nava Baratha Arts and Sports club had their club office on the first floor of the old “Kunjikkannan Textails” building later moved to their own building (somebody please comment on the building's current situation ).Many elderly people’s like “Menon” had a big role in the old soccer culture.The unhealthy part started in the Late 90s, as the people were focused on communal development and few nonsocial elements induced to the society start to look at the game ( mainly the annual tournament ) as a linguistic division ( Tamil, Malayalam ). The continued conflicts and turmoil made a permanent halt to the Famous Yearly football Tournament. Photo Courtesy: Asafja for sharing the photo

Posted By Admin on 10-01-2021 01:03:49 AM