Black and white winged dragonfly

Posted by Admin on 10-01-2021 12:20:56 AM

தட்டாரப்பூச்சி அல்லது தட்டான் (இலங்கை வழக்கு: தும்பி, dragonfly) என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் கண்ணைக் கவரும் பூச்சிக் குடும்பங்களின் அழகான, ஒல்லியான, பறக்கும் பூச்சித் தனியன்களாகும். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இப்பூச்சி வகைகளைத் தும்பி என்றும் அழைக்கிறார்கள். இவற்றைத் தட்டாம்பூச்சி என்றும் அழைப்பர். தட்டாரப்பூச்சிகள் 14000 முதல் 18000 கி.மீ வரைப் பறக்கக்கூடியன.
உலகில் தட்டான், ஊசித்தட்டான் பூச்சிகளில் ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் 503 தட்டான் இனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை உலகில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் வாழ்கின்ற ஓர் உயிரினம். இப்பூச்சி இனம் நில உலகில் மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே வாழ்ந்து வரும் ஓர் உயிரினம். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிவுற்ற தொன்மாக்களுக்கும் மிக முன்னதாகவே, ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வாழ்ந்துவரும் ஓர் உயிரினம்.

- ChandraSekar