காடுகளின் காவலானாய் திகழும் புலிகள்

Posted by Admin on 10-01-2021 12:24:25 AM

காடுகளின் காவலானாய் திகழும் புலிகளை umbrella species என்பார்கள். ஏனெனில் புலிகள் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ளது. அப்படிப்பட்ட புலிகளுக்கே யானைகளால் பல நன்மைகள் நடக்கிறது.காடுகளில் யானைகள் பெரிய படர்ந்த மரங்களின் கைக்கெட்டும் கிளைகளை ஒடித்தும், மூங்கில்களை வளைத்தும் அவற்றை உட்கொள்கின்றன. இப்படிச் செய்யும் கீழே விழும் இலை,தழைகளை தாவர உண்ணிகளான மான்கள், காட்டெருது. கரடி காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி ஆகியன உணவாக்கிக் கொள்கின்றன மரத்தின் படர்கிளைகளை யானைகள் முறித்துப் போடுவதால் கதிரவனின் ஒளி அடர்ந்த காட்டில் புகுந்து நிலத்தை அடைகிறது. இதனால் புற்கள் உள்ளிட்ட உணவுத் தாவரங்கள் செழித்து வளர்ந்து தாவர உண்ணிகளுக்கு அதிக தீவனம் கிடைக்கிறது. இவ்வாறு தாவர உண்ணிகள் அதிகரிக்கும்போது
அவை புலி போன்ற ஊனுண்ணிகளுக்குப் போதுமான உணவாகின்றன ஆக உணவு வலைப்பின்னல் (Food web)அமைப்பின்படி சூழலமைப்பில் யானைக்கு மிகப்பெரிய பெரிய பங்குண்டு.
- நன்றி : அழியும் பேருயிர் யானைகள்.
PC : Elise Ghilgrist